சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, November 8, 2015

சோபித்த தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக

By on 6:34 PM

கோட்டே ஸ்ரீ நாக விஹாரை விஹாராதிபதி மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. 

நவம்பர் 12ம் திகதி தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

இதன்படி இன்று காலை 09.00 மணிமுதல் 12ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கோட்டை நாக விகாரையில் அன்னாரின் உடலுக்கு பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்த முடியும் 

பின்னிணைப்பு நேரம் (இரவு - 09.20) 

சிங்கப்பூரில் இருந்து ​சோபித தேரரின் உடலை சுமந்து வந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இயற்கை எய்தினார். 

இதன்படி அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி பாராளுமன்ற மைதானத்தில் மாலை மூன்று மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment