சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக செயற்பட்ட திலக் மாரப்பன தாம் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நுகேகொடவில் இடம்பெற்ற வரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவன்கார்ட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக தாம் ஒருபோதும் இடையூறு விளைவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அவன்கார்ட் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தாம் அந்த அமைச்சு பதவியில் இருக்கும் பட்சத்தில் அந்த விசாரணைகள் தொடர்பிலான நம்பிக்கை இல்லாமல் போகும் என்பதால் இந்த தீர்மானத்தை எடுத்தாக அவர் குறிப்பிட்டார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

0 comments:
Post a Comment