சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, August 8, 2013

தெல்தோட்டை முஸ்லிம்களது வரலாற்றை தொகுக்கும் பணி

By on 6:31 AM
          
       தெல்தோட்டை முஸ்லிம்களது வரலாற்றை தொகுக்கும் பணியில் கடந்த 02 வருடங்களாக ஈடுபாடுகாட்டி வரும் ஜாமியா நளீமிய்யா பட்டதாரி அஷ்ஷெய்க் எம்.வை.எம். சிபான் (நளீமி) அவர்களது வரலாற்று தொகுப்பிலிருந்து ஒரு சிறு குறிப்பை இங்கே பிரசுரிக்கின்றோம். தெல்தோட்டை முஸ்லிம்களது வரலாறு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்.

Asshaike M.Y.M. SHIFAN (Naleemi)
No – 157 /B, Hilmy Manzil, Medekekila
Deltota, Kandy.
0772784699





        கண்டி மாநகரிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெல்தோட்டை நகர், நாற்புரமும் மலைகளால் சூழப்பட்ட அழகியதொரு பிரதேசம். ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் முக்கிய நகர்களில்  தெல்தோட்டை நகர் பிரதானமானதாகும். 
ஹேவாஹெட்டப் பிரதேசத்தில் முஸ்லிம் குடிப்பரம்பல் சிறீ விக்ரம ராஜசிங்கன் காலத்தில் ஆரம்பித்ததற்கு ஆதாரமாக வைத்திய முகாந்திரம்   மாமுநெய்னார் என்பவரது வரலாற்றிலிருந்து தெரிய வருகின்றது. மலையக அரசனின் மாளிகைக்கு முன்னால் இப்பொழுது அமைந்திருக்கும் கண்டி நகருக்கு அழகு தரும் வாவி, முன்பு வயல் நிலமாகவே இருந்து வந்துள்ளது. இந்த இடத்தை வாவியாக மாற்றியமைத்ததைக் கௌரவிக்கும் வகையில் மாமுநெய்னாருக்கு பட்டியகாமம் என்ற கிராமம் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் மாமுநெய்னார் தனது குடும்ப பரிவாரங்களுடன் அங்கு குடியேறியதாகவும் பட்டியகாமத்தில் பிறந்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. பிற்காலத்தில் ஆங்கிலேயர் இப்பிரதேசத்தில் கோப்பி செய்கை ஆரம்பித்த போது முஸ்லிம்களே ஈடுபட்டதாக தெரிய வருகின்றது. இன்று சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பட்டியகாமம் பகுதியில் அமைந்திருப்பதை காணலாம்.

(Report: M.S.M.Ziyadh)

0 comments:

Post a Comment