மூதூர்
பிரதான வீதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 13ற்கும்
மேற்பட்ட வியாபார நிலையங்கள் இனந்தெரியாதவர்களினால் உடைத்து
தேசப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று
வியாழக் கிழமை அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென
சந்தேகிக்கப்படுகின்றது.
வியாபார நிலையங்களின் கூரைகளை உடைத்து உள்நுழைந்துள்ள விசமிகள் பின்வழியூடாக வெளிச் சென்றுள்ளபோதும்
பெரும்பாலும் உடைமைகள் எவற்றையும்; களவாடவில்லையென
வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூதூரில்
இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் இயங்கும் சில தீய சக்திகளின்
வேலையாக இது இருக்குமென நம்பப்படுகின்றது.
இதேவேளை கடை உடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹாரிஸ் தலைமையில் முக்கியஸ்தர்களின் அவசர கூட்டமொன்று மூதூர் பிரதேச சபையில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இதேவேளை கடை உடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹாரிஸ் தலைமையில் முக்கியஸ்தர்களின் அவசர கூட்டமொன்று மூதூர் பிரதேச சபையில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை
கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மூதூர் பொலிஸார் சகல முயற்சியையும்
மேற் கொள்வதெனவும், இனிவரும் காலங்களில் இத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும்
இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு, மூதூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் பாதுகாப்பு நடவடிக்கையில்
ஒத்துழைப்பதெனவும் இனிவரும் காலத்தில் வாராந்த
சந்தை இடம்பெறும் இடங்களில் மாத்திரம் நடைபாதை வியாபாரிகளை அனுமதிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள்,மூதூர்
மஜ்லிஸ் அஸ்ஸுறா உறுப்பினர்கள், வர்த்தக
சங்க பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மூதூர் பொலிஸ் அதிகாரிகள், இராணுவ
அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment